காஷ்மீரில் இருந்து 110 விமானங்கள் மூலம் 10,090 பேர் வெளியேறியுள்ளனர்..!
Seithipunal Tamil April 25, 2025 08:48 AM

காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பலர் சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக கூடுதல் விமானங்களை இயக்குமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறிய நிலையில் 4,107 பேர் வருகை புரிந்துள்ளனர். ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பிச்செல்ல முண்டியடிக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.