எக்கச்சக்க வரி! இது தாங்காது! வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு ஜம்ப் அடிக்கும் சாம்சங்!
Webdunia Tamil April 25, 2025 07:48 PM

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு காரணமாக சாம்சங் நிறுவனம் தனது ஆலையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிவிதிப்பு முறை உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவால் அதிக வரி விதிக்கப்பட்ட சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் விலை அமெரிக்காவிலேயே விலை அதிகரித்துள்ளதால் அவற்றின் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது.

இந்நிலையில் வியட்நாமிற்கும் அமெரிக்கா 46% வரி விதித்துள்ளது. இதனால் வியட்நாமில் செல்போன் தயாரிப்பை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு பெரும் அடியாக இது உள்ளது. முக்கியமாக சாம்சங் நிறுவனத்திற்கு. பல சிறப்பம்சங்களுடன் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக ஆனால் அதை விட குறைந்த விலையில் சாம்சங் செல்போன்களை விற்று வருகிறது.

ஆனால் தற்போதைய புதிய வரி விதிப்பால் சாம்சங் ஃபோன்களின் விலை ஐபோனின் விலையை விட பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் சாம்சங்கின் விற்பனை பெரிய அடி வாங்கும். அதுகுறித்து யோசித்த சாம்சங், இந்தியாவிற்கு அமெரிக்கா 10 சதவீத வரி விதித்துள்ளதால், தனது ஆலையை இந்தியாவிற்கு மாற்றி விட்டால் வரியை குறைக்கலாம் என முடிவு செய்து திட்டம் தீட்டி வருகிறதாம்.

சீனாவுக்கு அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஷாவ்மி, ரியல்மி, ஒன்ப்ளஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நேரடி ஆலை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.