கொத்தமல்லி விதையில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Top Tamil News April 28, 2025 08:48 AM

பொதுவாக கொத்தமல்லி  விதையில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் நிறைய அடங்கியுள்ளது .இதன் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இரவில் தூங்கும் முன் சிறிது கொத்தமல்லி விதைகளை  நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும்.
2.இப்படி குடித்தால் கண்களில் ஏற்படும் அழற்சி ,கண் வீக்கம்,அழற்சி மற்றும் கண் சிவத்தல் மற்றும் ரத்த சோகை போன்ற நோய்கள் குணமாகும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

3. இந்த நீர் சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு நலம் சேர்க்கும்
 4..  ஒரு வாரம் இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
5., இப்படி குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக்கப்படும் ,
6.மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலி, வாய்வுத் தொல்லை போன்றவற்றைத் இந்த நீர் மூலம் தவிர்க்கலாம்
7.அஜீரண பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபட 1.2 கிராம் கொத்தமல்லி விதைகள் அல்லது 1/2 டீஸ்பூன் மல்லி பொடியை 150 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் கழித்து, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடித்தலே சிறந்த வழியாகும்  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.