ரேஷன் கடைகளில் துவரம் பருப்பில் கலப்படம்... தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு!
Dinamaalai April 28, 2025 01:48 PM

தமிழகத்தில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததாக புகார்கள் வந்துள்ளன. 

இது குறித்து  பாஜக உட்பட  அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. அதன் பிறகு துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை கண்டுபிடித்த அந்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள வாணிப கழகக் கிடங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக உணவுத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கலப்பட பருப்பை வழங்கிய 5 தனியார் நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.