நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை... பாலியல் பதிவுகளை தடை செய்யக்கோரும் மனு!
Dinamaalai April 28, 2025 06:48 PM

இன்று ஏப்ரல் 28ம் தேதி திங்கட்கிழமை  சமூக வலைத்தளங்களில் பாலியல் பதிவுகளை தடை செய்யக்கோரும் மனு உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது.   "சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி மற்றும் பாலியல் சார்ந்த பதிவுகள் எந்த கட்டுப்பாடும் இன்றி வெளியாவதை கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  


அதே நேரத்தில் ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், தொடர்கள் செக்ஸ் தொடர்பான காட்சிகள் தணிக்கை செய்யப்படாமல் வெளியாகின்றன. எனவே, இதை தடை செய்ய வேண்டும், இதற்காக தேசிய உள்ளடக்கக் கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த மனு இன்று ஏப்ரல் 28ம் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு  நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.