இந்திய ராணுவம் தொடர்பாக whatsapp தளங்களில் பொய்யான செய்தி ஒன்று பரவி வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் விதமாகவும், பணியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக வங்கி கணக்கு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று வாட்ஸ்அப் தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த செய்தி தவறானது என இராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், அந்த செய்தியில் இது மந்திரி சபையின் முடிவு என்றும் நடிகர் அஷய்குமாரின் பரிந்துரை என்றும் கூறப்பட்டிருப்பது பொய் என்றும் கூறியுள்ளது. அதோடு அதில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் தவறானது என்பதால் அதன் மூலம் மோசடி நடைபெறும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.