சட்டபேரவையில் இன்று ( ஏப்ரல்27) ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். "எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாத வகையில் பொத்தாம் பொதுவாக குற்றசாட்டுகளைச் சொல்லும் காரணத்தால் சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.
மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் (எடப்பாடி)அவரது ஆட்சியின் சில சாதனைகளைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். அதேபோல இப்போது நடந்துகொண்டிருக்கக்கூடிய ஆட்சியில் சில விஷயங்களைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். ஆனால் தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அவரது ஆட்சியில் நடந்த விஷயங்களைக் கண்ணீருடன் புலம்புவார்கள்.
ஸ்டாலின்பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சாத்தான்குளமே சாட்சி, துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிசூடே சாட்சி, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்த ஆட்சி.
தமிழ்நாட்டு மக்களின் புலம்ப வைத்ததே அதிமுக ஆட்சியின் சாதனை. எங்கும் எதிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என எதிலும் ஊழல். அந்த ஊழலில் இருந்துத் தப்பித்துக்கொள்ளத் தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் அடகு வைத்தது யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
எதிர்கட்சித் தலைவர் தலைமையில் ஆட்சி நடந்ததை விட திமுக ஆட்சியின் இந்த நான்கு ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஒப்பிடும்போது 2024 ஆண்டில்தான் கொலை சம்பவங்கள் குறைந்திருக்கிறது.
அதிமுக ஆட்சியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரவுடிகள் 1929 பேர் என்றால் திமுக ஆட்சியில் 3645 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்நிலைய மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டிருக்கிறது.
எனவே நான் இங்கே குறிப்பிடுவது திமுகவின் சட்ட ஒழுங்கைப் பற்றி பேச அதிமுகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...