நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது…. ஐகோர்ட் வேதனை…!!
SeithiSolai Tamil April 29, 2025 03:48 AM

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

இது குறித்த அவர் கூறியதாவது, 60 சதவீத நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25 சதவீத அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளிலும் செலவிடப்படுகிறது. வெறும் 7 சதவீத நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது என்று நீதிபதி கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.