தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார். தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாததால் சுப்பிரமணி உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் மூலம் சத்யராஜ், சிவகார்த்திகேயன், சிம்பு, நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஜய் டிவி பாலா, சமுத்திரக்கனி போன்ற பலர் இவருக்கு சிகிச்சைக்காக பண உதவி செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர் நடித்து முடித்த “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” என்ற படத்தில் டப்பிங் பணிகள் நடந்து வருவதை கேள்விப்பட்ட சுப்பிரமணி இயக்குனரை தொடர்பு கொண்டு, “நான் நடித்த காட்சிகளுக்கு நானே டப்பிங் பேசி தருகிறேன்” என்று கூறியுள்ளார்.
பின்னர் ஸ்டூடியோக்கு சென்று டப்பிங் பேசி தனது உடல் நிலையை பற்றி கவலை கொள்ளாமல் பணி செய்திருக்கிறார். இதனை கண்ட பட குழுவினர் அவரது கடமை உணர்வை கண்டு ஆச்சரியமடைந்தனர். மேலும் சுப்ரமணி தனது குடும்பத்தினருக்கு உதவி வேண்டி தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.