Vijayakanth: விஜயகாந்தை ஒரு நல்ல நடிகர் என்று சொல்வதை விட ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். அந்த அளவு அவர் மனிதாபிமானம் நிறைந்தவர். யாருக்கு எந்தத் துன்பம் என்றாலும் உடனே உதவக்கூடியவர். எம்ஜிஆர் எப்படி வாரி வாரி வழங்கி கொடைவள்ளல் என்று போற்றப்பட்டாரோ அதே போலத்தான் விஜயகாந்தும். அதனால்தான் அவரை ‘கருப்பு எம்ஜிஆர்’ என்றே அழைத்தனர்.
தமிழ்சினிமா உலகில் ஆரம்ப காலகட்டத்தில் தன்னோட நிறத்தாலும், நடிப்பாலும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் விஜயகாந்த். இருந்தாலும் 1979ல் ஒருவழியாக எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் தன்னைப் போல யாரும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் வைத்து இருந்தார். அதனால் முன்னணி இயக்குனர்களை விட புதுமுக இயக்குனர்களுக்கே வாய்ப்பு கொடுத்தார்.
ஒரு முன்னணி ஹீரோ என்றால் தன்னோட கெரியரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அடுத்தடுத்த படங்களில் கதை எப்படி? இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்னு பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அதே போல விஜயகாந்த் கிடையாது. தன்னை நம்பி வருபவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் சரி.
அவர்கள் சொல்லும் கதை பிடித்து விட்டால் உடனே நடிக்க சம்மதித்து விடுவார். தான் ஆரம்பகாலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்தோம். இது மாதிரி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்பதை மனதில் நிறுத்தியதால் தான் இத்தகைய செயலைச் செய்தார் என்றே சொல்லலாம்.
அப்படி அவர் 54 இயக்குனர்கள் வரை அறிமுகப்படுத்தியுள்ளார். சில நடிகர்கள் தன்னோட படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குனர்களை டார்ச்சர் செய்வார்கள். ஆனால் விஜயகாந்த் அதில் விதிவிலக்கு. எந்த தொந்தரவும் செய்யாத ஒரே நடிகர் அவர்தான்.
கைநீட்டி சம்பளம் வாங்கிவிட்டால் அந்தக் கதையில் எப்போதுமே தன்னுடைய கருத்தைத் திணிக்க மாட்டாராம். இயக்குனர்களை நம்பி மட்டுமே அவர் ஒப்பந்தம் செய்யும் திரைப்படங்களில் நடித்துக் கொடுப்பார். இது கடைசி வரை அவர் சினிமா வாழ்க்கையில் கடைபிடித்து வந்த மிகப்பெரிய விஷயமாகவே பார்க்கப்பட்டது.