பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா முழுவதும் கடும் பரபரப்பு நிலவுகிறது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் கடந்து ஏழு நாட்கள் ஆகியுள்ளன. நாட்டின் பொது மக்களும், அரசியல் தலைவர்களும் இந்த பயங்கரவாத தாக்குதளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் சார்பில் தொடர்ந்து இந்தியாவை நோக்கி அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் இந்த அச்சுறுத்தல் இந்திய அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாகிஸ்தான் மற்றும் அதன் தலைவர்களின் இந்த போக்குக்கு தகுந்த பதிலடி அளித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பாகவே ஓவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அசாதுதீன் ஓவைசி மேலும் கூறுகையில், “இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தான், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தியா எந்த அச்சுறுத்தல்களுக்கும் தளராது. பாகிஸ்தான் தனது நிலையைப் புரிந்துகொண்டு அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள், பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கும், அதன் மீது ஓவைசி அளித்த கடும் பதிலடிக்கும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஆதரவும் பேசுபொருளாகவும் மாறி வருகிறது.