இன்று அட்சய திருதியை... தங்கம் வாங்குறதை விட முக்கியம்... இதைச் செய்ய மறக்காதீங்க!!
Dinamaalai April 30, 2025 05:48 PM

இன்று ஏப்ரல் 30ம் தேதி அட்சயதிருதியை தினத்தில் தங்கம் வாங்குவதை விட இதைச் செய்ய மறக்காதீங்க. அட்சயம் என்றால் அள்ள அள்ளக்குறையாது என்று பொருள். அட்சயபாத்திரத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் பசியாறினர் என்பது வரலாறு.

அட்சதிருதியை தினத்தன்று எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தங்கம் வாங்கினால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இதனால் பல நகைக்கடைகள், வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து வருகிறது. இல்லத்தரசிகள் பலர் நகைக்கடைகளுக்கு படையெடுத்து வருகிறார்.

இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் மட்டும்தான் ஐஸ்வர்யம் பெரும் என்று அர்த்தமாகாது. இந்த நன்னாளில் பிறருக்கு உதவும் வகையில், தானம் வழங்குவது, புண்ணிய காரியங்களை செய்வதும் சிறப்பு வாய்ந்தவையாக அமையும். எனவே தங்கம் வாங்குவதை விட தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இதையேதன் புராணக்கதைகளும் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு மனிதன் வாயில் இருந்து போதும் என்ற சொல் வருகிறது என்றால், அது உணவுக்காக மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட திருப்தியளிக்கும் உணவினை தானம் செய்வதால், நவகிரகங்களில் ஆசி கிடைக்கும். வீட்டில் என்றென்றும் செல்வம் நிலைத்திருக்கும். தானமாக உணவுப் பொருளையோ, உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் மளிகை சமான்களாகக் கூடவோ இருக்கலாம். இயன்ற அளவுக்கு செய்யும் தானம் கூட இறைவனின் அருளை பெற உதவும்.

குங்குமம் மங்கலத்தின் அடையாளம். குங்குமம் மற்றும் குளிர்ச்சி தரும் சந்தனத்தையும் அட்சயதிருதியை தினத்தன்று தானம் செய்வது சுபிட்சத்தை தரும். தாம்புலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்குடன் சேர்த்து மஞ்சள், குங்குமம், சந்தனம் இவற்றை கோவில்களில் வைத்து கொடுப்பதன் மூலம் சுக்கிரனின் பார்வை கிடைக்கும். குங்குமம் சுக்கிரனின் அம்சமாகும். சந்தனத்தை தானமாக வழங்குவதன் மூலம் மன நிம்மதி, மன அமைதி கிட்டும். மேலும் இது ஜோதிட ரீதியாக ராகு, கேது கிரகங்களின் தாக்கத்தையும் குறைக்கும்.

முடிந்த அளவுக்கு வீட்டு அருகில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியோருக்கு ஆடைகளை தானமாக வழங்குவதன் மூலம் அவர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம். அட்சயதிருதியை அன்று பெரும் ஆசிர்வாதமும் அள்ள அள்ள குறையாத அளவுக்கு நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். நீங்கள் செய்கின்ற தானமோ, நல்ல விஷயங்களோ உங்களுக்கு பல மடங்காக திருப்பி கிடைக்கும் நன்னாளான அட்சயதிருதியை தினத்தில் பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல் இல்லாதவருக்கு வழங்கியும் பலன்களை பெறலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.