நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க செய்கிறது. இது உதட்டை ஈரப்பதமாக வைத்து வறட்சியை தடுக்கின்றன. கடுமையான வெப்பம் மற்றும் குளிர் நிலையில் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்கின்றன.
நெய் வைட்டமின் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. உதடுகளுக்கு சிறந்த வயதான எதிர்ப்பு நன்மைகளை இது அளிக்கிறது இந்த ஊட்டச்சத்துக்கள் மாசுபாடு மற்றும் புற ஊதாக்கதிர்கள் போன்ற பாதிப்புகளிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. உதடு வறட்சி வெடிப்பு மட்டும் அல்லாமல் தளர்வின்றி இறுக்கமாக வைத்திருக்க இவை உதவுகிறது.
உதடுகளில் நெய் தடவுவது எரிச்சலூட்டும் சருமத்தை கணிசமாக ஆற்றும் அமைதிப்படுத்தும். உதடுகளில் புண், அழற்சி, வெடிப்பு நிலை இருந்தால் அதை சரி செய்ய நெய் சிறந்த தேர்வாக இருக்கும். உதட்டில் நெய் தடவுவது குறிப்பாக இரவு நேரத்தில் நெய் தடவுவது உதட்டின் வீக்கம் மற்றும் அசெளகரியத்தை திறம்பட குறைக்கிறது.
உதடுகளில் நெய்யை பயன்படுத்துவது அதன் கடினத்தன்மையை போக்கி மென்மையாக்க செய்யும். நெய் உதட்டுக்கு பாரம்பரிய தீர்வாக இருக்கும். நெய்யை தொடர்ந்து பயன்படுத்துவது ஆழமான ஈரப்பதத்தை உதடுக்கு அளிக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது சேதமடைந்த செல்களை சரி செய்ய உதவுகிறது. சுத்தமான நெய் உதடுகள் இழந்த நிறத்தை மீட்டெடுக்க செய்கிறது. இதனால் உதட்டின் கடுமையான நிறம் குறைந்து உதட்டின் நிறம் மேம்படுகிறது.
உதடுகள் மென்மையானவை மற்றும் உடையக்கூடியவை. நெய் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படக்கூடியவை. மேலும் இது மென்மையானதும் கூட என்பதால் இதை எக்ஸ்ஃபோலியேட் செய்யும் போது அது காயப்படுத்தாது. இது உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் நெகிழ்ச்சித்தன்மையை தக்க வைக்கவும் உதவுகிறது.
உதட்டுக்கு நெய் எப்படி பயன்படுத்துவது?நெய் உதடுகளுக்கு நல்லது. அதன் கொழுப்பு அமில உள்ளடக்கம் காரணமாக உதட்டை ஈரப்பதமாக்குகிறது. அதனால் நெய் சருமத்துக்கு எப்போதும் பக்கவிளைவுகளை உண்டு செய்வதில்லை.