இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஷஷாங்க் சிங் நான்காவது ஓவரில் அடித்த பந்து மைதானத்தை தாண்டி சிக்ஸர் ஆக பறந்தது. அந்த பந்து மைதானத்தை தாண்டி பறந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் அடித்த இமாலய சிக்ஸர் தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.