காரைக்குடி தேன் ஆற்று பாலம் அருகே பால் வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்தது.
இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.