IPL 2025: குஜராத் அதிர்ஷ்ட வெற்றி
Dhinasari Tamil May 07, 2025 05:48 PM

#featured_image %name%

ஐ.பி.எல் 2025 – மும்பை vs குஜராத் – வாங்கடே, மும்பை – 06.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணியை (155/8, வில் ஜேக்ஸ் 53, சூர்யகுமார் யாதவ் 35, கார்பின் போஷ் 27, சாய் கிஷோர் 2/34, சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான், ஜெரால்ட் கோயட்சி தலா ஒரு விக்கட்) குஜ்ராத் டைடன்ஸ் அணி (19 ஓவர்களில் 147/7, ஷுப்மன் கில் 43, ஜாஸ் பட்லர் 30, ரூதர்ஃபோர்ட் 28, பும்ரா 2/19, போல்ட் 2/22, அஷ்வினி குமார் 2/28, தீபக் சாஹார் 1.32) டக்வொர்த் லூயிஸ் முறையில் 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. பொதுவாக மட்டையாடுவதில் சிறந்து விளங்கும் மும்பை அணி இன்று தொடக்கம் முதலே சொதப்பியது. தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (2 ரன்), ரோஹித் ஷர்மா (7 ரன்) இருவரும் முதல் நாலு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அடுத்த ஜோடியான வில் ஜேக்ஸ் (35 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (24 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர்) இருவரும் 12ஆவது ஓவர் வரை விளையாடி அணிக்கு வேகமாக ரன் சேர்த்தனர். ஆனால் அதற்குப் பின் வந்த திலக் வர்மா (7 ரன்), ஹார்திக் பாண்ட்யா (1 ரன்), நமன் திர் (7 ரன்), ஆகியோர் இன்று ஏமாற்றினர்.

கோர்பின் போஷ் (22 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இறுதியில் சற்று ஆறுதல் தந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

156 ரன் எடுத்தால் வெற்றி, என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் (5 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் (46 பந்துகளில் 43 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தார்.

மும்பையின் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். 18ஆவது ஓவர் முடிந்தபோது குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 136 ரன் எடுத்திருந்தது. அச்சமயத்தில் மழை குறுக்கிட்டது.

இரவு 1229க்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் அணிக்கு ஆட்டம் 19 ஓவராகக் குறைக்கப்பட்டு, இலக்கு 147 என மாற்றியமைக்கப்பட்டது. அதாவது கடைசி ஓவரில் அந்த அணி 15 ரன் எடுக்க வேண்டும். தீபக் சாஹர் கடைசி ஓவரை வீசினார்.

ராகுல் திவாத்தியா மற்றும் கோயட்சி இருவரும் குஜராத் அணிக்காக விளையாடினர். முதல் பந்தில் 4, இரண்டாவது பந்தில் சிங்கிள், மூன்றாவது பந்தில் சிக்சர், நாலாவது பந்தில் 1 ரன்; அது நோபாலாகப் போனது. மீண்டும் வீசப்பட்ட நாலாவது பந்தில் 1 ரன். ஐந்தாவது பந்தில் கோயட்சி ஆட்டமிழந்தார்.

ஆறாவது பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி. மிட்-ஆஃப் திசையில் அடிக்கப்பட்ட பந்தை எடுத்த பாண்ட்யா பந்துவீச்சாளர் ஸ்டம்பில் வீசினார்; ஆனால் அது ஸ்டம்பை அடிக்க வில்லை. அதனால் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.