தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13-ம் தேதி பணி ஓய்வுபெற இருக்கும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது
உச்ச நீதிமன்றத்தில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 21 பேரின் சொத்து விவரத்தை உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் வெளியிட்டப் பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். மேலும் பீலா எம்.திரிவேதி, பி.வி.நாகரத்னா ஆகிய பெண் நீதிபதிகளில் பீலா திரிவேதி சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதிகளின் சொத்து விவரத்தை பொதுவெளியில் வெளியிட கடந்த ஏப்ரல் 1-ம் முழு நீதிமன்றமும் முடிவு செய்தது. இதன்படி இதுவரை பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்துவிவரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற நீதிபதிகளின் சொத்து விவரம் பெறப்பட்ட உடன் பதிவேற்றம் செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.