அடேங்கப்பா..! நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நடிகர் பாலையா…? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!
SeithiSolai Tamil May 11, 2025 10:48 PM

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர் ரஜினிகாந்த். கடந்த 2023 ல் இவர் நடித்த “ஜெய்லர்” திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் 2ம் பாகமான ஜெய்லர் 2 திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.

அதற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திரைப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் இந்த படத்தில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ் குமார் நடிக்கும் நிலையில், மோகன்லாலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.