மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதி முழுக்கவே கரும்புகையாக காட்சி அளிக்கிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் தற்போது வரையில் வெளியாகவில்லை.