மது போதையில் ஏற்பட்ட தகராறு- நண்பன் தலையில் கல்லை போட்டு கொலை
Top Tamil News May 12, 2025 10:48 PM

திருப்பூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறு நண்பன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (17) என்பவர் இந்து முன்னணியில் இருந்து பாஜகவிற்கு மாறி உள்ளார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் இவரது நண்பர்கள் 4 பேர் (இந்து முன்னணியை சேர்ந்தவர்கள்) கோல்டன் நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர் அப்போது மது அருந்தாத பிரகாஷ் அந்த வழியாக சென்றதாக கூறப்படுகிறது.  அவரை நிறுத்தி நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்த பொழுது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் நான்கு பேரும் சேர்ந்து பிரகாஷை அடித்து கீழே தள்ளி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். 

சிறிது நேரம் கழித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்த போது பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிர்ச்சடைந்தனர் அவர்கள் கொடுத்த தகவலின் பெரும் விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு சோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் அவர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.