ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து இன்றிரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
Dinamaalai May 13, 2025 02:48 AM

 


'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியைத் தொடர்ந்து இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. 

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். அதன்படி, இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.