உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியில் ஆட்டோ ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட முயன்ற போது அதிலிருந்து 22 பயணிகள் இறங்கினர்.
இந்த ஆட்டோ-ரிக்ஷாவில் மிகக்குறுகிய இடத்தில் இத்தனை பயணிகளை ஏற்றி சென்றது, பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இது போன்ற அசாதாரணமான பயணம் பொதுமக்களின் உயிருக்கு நேரடி அபாயமாக இருக்கிறது என அறிவுறுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆட்டோவை பறிமுதல் செய்து, ஓட்டுநருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அத்துடன், ஆட்டோ ஓட்டுநர்களின் பொறுப்பற்ற நடத்தையை வலியுறுத்தும் வகையில் வைரலாகி வருகிறது. விரைவாக நடவடிக்கை எடுத்த, போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.