தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சுதா கொங்கரா ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அதைப் பற்றி தற்போது ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது. அது என்னவென்றால் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனிடம் கூறிய கதை அவர் ஏற்கனவே நடித்த டாக்டர் படத்துடன் ஒத்துப் போவதால் படத்தின் கதையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவிடம் கூறினாராம்.
ஆனால் வெங்கட் பிரபு தான் கூறிய கதையில் மாற்றங்கள் செய்தால் அந்த படத்திற்கு உண்டான ஆதாரமே போய்விடும் படத்தின் ஆன்மாவே இல்லாமல் போய்விடும் என்று சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணலாமா வேண்டாமா என்று பேச்சுவார்த்தையில் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். இது தவிர அந்த படத்திற்காக வேறு நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு வருகிறாராம் வெங்கட் பிரபு. இதனால் இவர்கள் இருவரும் இணைந்து உருவாகும் படம் சிக்கலில் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் நிலவுகிறது.