நான் திருமணம் செய்ய போகும் பெண் கிராமமா நகரமா….? பதிலளித்த நடிகர் சிம்பு…
Tamil Minutes May 13, 2025 03:48 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.

2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.

அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்புவிடம் நீங்கள் திருமணம் செய்ய போகும் பெண் கிராமத்து பெண்ணாக இருக்க வேண்டுமா? அல்லது நகரத்து பெண்ணாக இருக்க வேண்டுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சிம்பு பதிலளித்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் கிராமத்து பெண்ணா நகரத்து பெண்ணா என்று பிரித்து பார்க்காதீர்கள். ஜீன்ஸ் அணிந்திருக்கும் பெண்கள் எல்லாம் கெட்டவர்களும் இல்லை சுடிதார் அணிந்திருக்கும் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை. நான் திருமணம் செய்ய தேர்ந்தெடுக்க பெண்ணாக இருந்தால் போதும் என்று பதில் அளித்திருக்கிறார் சிம்பு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.