#featured_image %name%
ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முப்படைகளின் சார்பில் அவற்றின் டிஜிஎம்ஓ.,க்கள் கலந்து கொண்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் மே. 11 அன்று மாலை விளக்கம் அளித்தனர். இந்திய முப்படைகள் தரப்பில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
செய்தியாளர்களுடனான இந்தக் கேள்வி – பதில் நிகழ்ச்சியின் போது, சில ரகசியங்களை நாங்கள் இங்கே வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டாம். காரணம், இப்போதும் போர்ப் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நாம் இப்போது ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியிருக்கிறோம் என்று ராணுவத்தின் தரப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டது. இருந்த போதும், வழக்கம் போல் ஊடக செய்தியாளர்கள் ஊகத்துடன் கூடிய கேள்விகளை முன்வைத்தனர். அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்களில் இது இப்போது பேசுவதற்கு உகந்ததல்ல என்று சொல்லி முடித்துக் கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கவனம் ஈர்த்த மூன்று விஷயங்கள்…
முதலாவது…
“மிஷன் வெற்றி… ஆனா The Hindu-வுக்கு தேவை ரபேல் டேமேஜ் ரிப்போர்ட்!”
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பற்றிய முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நேரலை… நாட்டின் ராணுவ அதிகாரிகள் மிஷன் வெற்றிகரமாக முடிந்தது என அறிவிக்கின்றனர். அப்படியிருக்க…
முன் வருகிறார் ஒரு ஊடக செய்தியாளர். The Hindu. கேள்வி:
“ரபேல் இழப்புகள் பற்றிய பேச்சு சமூக ஊடகங்களில் அதிகம்… எவ்வளவு இழந்திருக்கின்றோம்? தெளிவாக சொல்ல முடியுமா?” எனத் துணிந்து (!) கேட்டார்.
அதற்கு ராணுவ பதில் — “நாங்கள் திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக முடித்துள்ளோம். அதுதான் முக்கியமானது. இப்போதைய எந்தவொரு தகவலும் எதிரிகளின் புலனாய்வுக்கு ஆக்கமாக போகக்கூடும்.”
நாட்டு ரகசியங்களை நேரலையில் கேட்டால், அது பத்திரிகை உரிமை இல்லை — அது பைத்தியக்கார சுயநலம்! TRP-க்கும், தேச பாதுகாப்புக்கும் உள்ள வித்தியாசம் தெரியாம போச்சு போல!
முன்பே தெரிந்ததுதான்… எவ்வளவு ரபேல் வாங்கினோம் என்பது பப்ளிக் டொமைனில் இருக்கு. ஆனா மிச்சம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்கன்னு கேட்பது, “எதிரிக்கு டிப்ஸ் குடுங்க”ன்னு நேர்ல கேக்குற மாதிரியே! ஏன்? பாகிஸ்தான் கேட்க வேண்டிய கேள்வியை நாமே கேக்கணுமா?
ராணுவம் ரத்தம் சிந்தும் போது, சில ஊடகங்கள் ரகசியம் சிதறும் கேள்விகள் கேட்கிறது! இது பத்திரிகை அல்ல. இது பக்கவாதம். படையில் இரத்தம் சிந்தும் போது, சில ஊடகங்களில் “சிந்தனைகள்” மட்டும் கசிகிறது. அந்த சிந்தனைகள், நாட்டு எதிரிகளுக்கு பயனுள்ளதாக இருந்தால் மட்டும் போதும்.
இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒரு பதில் போதும்: “இந்திய ராணுவம் வென்றிருக்கிறது. அதுவே போதும். எதிரி எவ்வளவு இழந்திருக்கான்னு கவலைப்பட்டீங்கன்னா, அது தான் உண்மையான தேசபக்தி!”
இரண்டாவது…
கேள்வி : இந்தியாவின் ரபேல் மற்றும் சில போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறதே??
பதில் : நாம் போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகள் நிச்சயமாக இருக்கும். ஆனால் நாம் நமது இலக்கை அடைந்துவிட்டோமா? இல்லையா என்பதுதான் கேள்வி. “Operation Sindoor” ல் ஈடுபட்ட நமது “விமானிகள்”அனைவரும் பத்திரமாக வீடு திரும்பிவிட்டார்கள் – டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏர் ஆப்பரேசன்ஸ், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி.
நடுநிலைவாதி : அப்போ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மைதானே? விமானிகள் மட்டும்தான் திரும்ப வந்திருக்காங்க?
தேசியவாதி : அட முட்டாப்பயலே வான்வழி தாக்குதல் நடத்திய விமானிகள் பத்திரமா வீடு திரும்பி விட்டார்கள்னு சொன்னால் விமானமும் பத்திரமாக வந்து சேர்ந்தது என்பதுதானே அர்த்தம்??? விமானம் இல்லாம விமானி மட்டும் பறந்தா இந்தியாவுக்குள் வந்தார்???
நடுநிலைவியாதி : – ???
மூன்றாவது…
வான் படை தளபதி ஏ கே பார்தி சொன்னது – எங்க வேலை எதிரியின் முக்கிய இடங்களை அழிப்பது மட்டுமே; இதில் ஏற்படும் சேதத்தைப் பொறுக்குவது எங்கள் வேலை அல்ல அது அவர்கள் வேலை!
News First Appeared in