“நான் அவருக்காக தான் கிரிக்கெட் பார்க்கவே ஆரம்பித்தேன்”… ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடும் அணிதான் என்னுடைய Favourite.. பிரபல விஜய் பட நடிகை ஓபன் டாக்..!!
SeithiSolai Tamil May 12, 2025 11:48 PM

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் சிங்கப்பூர் சலூன், லக்கி பாஸ்கர், தி கோட், மட்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்த “சங்கராந்திகி வஸ்துன்னம்” திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது மீனாட்சி சவுத்ரி “அனகனக ஓக ராஜு” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் நடிகை மீனாட்சி சவுத்ரி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மீனாட்சி சவுத்ரி ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் உங்களுக்கு ஐபிஎல் போட்டியில் எந்த அணியை உங்களுக்கு பிடிக்கும் என்று அங்கிருந்தவர்கள் கேட்டனர். அதற்கு அவர் “இந்த அணியை தான் பிடிக்கும்… அந்த அணியை தான் பிடிக்கும் என்பதெல்லாம் இல்லை…. தோனி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவருக்காக தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன்…. அவர் எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணியை எனக்கு பிடிக்கும்” என்று பதிலளித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.