திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது திடீர் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 4 தொழிலாளிகள் பள்ளத்தில் சரிந்து மண்ணில் புதைந்துவிட்டனர். இதனையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
எந்திரங்கள் மூலம் அவர்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 தொழிலாளர்களில் 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\