தமிழ் திரையுலகில் கவிப்பேரரசாக அறியப்படும் வைரமுத்துவின் தாயார் உடல் நலக்குறைபாடு வயது மூப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து பலரும் இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தனர். பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இது குறித்து வைரமுத்து என் அன்னையின் மறைவுத் துயரத்துக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், என் அன்னையின்
மறைவுத் துயரத்துக்கு ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற நீதியரசர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேசிய எம்.பி டத்தோஶ்ரீ சரவணன், இறுதிச் சடங்கில் இறுதிவரை உடன் இருந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன், ஐ.பி.செந்தில் குமார் எம்.எல்.ஏ, சரவணகுமார் எம்.எல்.ஏ, பி.ஆர்.பாண்டியன் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்ன அமைச்சர் பெருமக்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சகோதரர் ரஜினிகாந்த் உள்ளிட்ட கலையுலக அன்பர்கள், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள்,இரங்கல் தெரிவித்த ப.சிதம்பரம் எம்.பி, ஓ.பன்னீர் செல்வம், செல்வப் பெருந்தகை, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள், வெற்றித் தமிழர் பேரவைச் சொந்தங்கள், உலகத் தமிழ் அன்பர்கள் உறவினர்கள், நண்பர்கள், ஊடக உறவுகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் துன்பத்தைப்பகிர்ந்து கொண்டஉங்கள் அன்பை மறவேன் என குறிப்பிட்டுள்ளார்.