ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர் அமிதா பச்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் குறித்து தனது தந்தை எழுதியதாக ஒரு கவிதையை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.