இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் சமூகவலைதள பதிவில், "கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் டெஸ்ட் போட்டியில் விளையாட தொடங்கினேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் எனக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துள்ளது என் 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது" என்றார்.