டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு!
Top Tamil News May 12, 2025 05:48 PM

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் விராட் கோலி. இவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். இதேபோல் தனக்கென பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடருக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.  

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு முடிவை விராட் கோலி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் பிசிசிஐ அவரது முடிவை ஏற்காமல் மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இந்த நிலையில், விராட் கோலி தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடதக்கது


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.