Breaking: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்… பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil May 11, 2025 10:48 PM

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு வார காலத்திற்கு மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் மீண்டும் போட்டிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால் அவர் போட்டி நடைபெறுவதற்கான தேதியை குறிப்பிடவில்லை. எனவே போட்டி நடைபெறுவதற்கான தேதி மற்றும் இடங்கள் போன்றவைகள் குறித்த அட்டவணை பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று பிசிசிஐ துணை தலைவர் தற்போது பேட்டி கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.