#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs சென்னை – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 07.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (179/6, அஜிங்க்யா ரஹானே 48, ஆண்ட்ரூ ரசல் 38, மனிஷ் பாண்டே 36, சுனில் நரேன் 26, நூர் அகமது 4/31, அன்ஷுல் காம்போஜ் 1/38, ஜதேஜா 1/34) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (19.4 ஓவர்களில் 183/8, டிவால்ட் பிரிவிஸ் 52, ஷிவம் துபே 45, உர்வில் படேல் 31, ஜதேஜா 19, தோனி ஆட்டமிழக்காமல் 17, வைபவ் அரோரா 3/48, ஹர்ஷித் ராணா 2/43, வருன் சக்ரவர்த்தி 2/18, மொயின் அலி 1/23) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (9 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் (17 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே (33 பந்துகளில், 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து 7.1 ஓவர் வரை விளையாடினார்.
ரகுவன்ஷி (1 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை. அவருக்குப் பின் வந்த மணீஷ் பாண்டே (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஆண்ட்ரூ ரசல் (21 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். 18.3ஆவது ஓவரில் ரிங்கு சிங் விளையாடவந்தார். 6 பந்துகளில் 9 ரன் அடித்தார். இப்படியாக கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது.
விக்கட் எடுக்கவில்லை என்றாலும் அஷ்வின் இன்று சிறப்பாக பந்துவீசினார். மற்ற சுழப் பந்துவீச்சாளர்களான ஜதேஜா மற்றும் நூர் அகமது இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள்.
180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மஹத்ரே (பூஜ்யம் ரன்) மற்றும் டேவன் கான்வே (பூஜ்யம் ரன்) இருவரும் முதல் இரண்டு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த, இன்று முதன்முறை ஆடுகின்ற உர்வில் படேல் (11 பந்துகளில் 31 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடனினார்.
நாலாவதாகக் களமிறங்கிய அஷ்வின் (8 ரன்) 7 பந்துகள் மட்டுமே தாகுப்பிடித்தார். அதன் பின்னர் ஜதேஜா (10 பந்துகளில் 19 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) வெகுநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தோற்றுவிடுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் இருக்க, அடுத்து வந்த டிவால்ட் பிரிவிஸ் (25 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) அதிரடி ஆட்டம் ஆடினார்.
அவர் ஷிவம் துபே (40 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) உடன் இணைந்து வெற்றியை சாத்தியப்படுத்தினார். 18ஆவது ஓவர் முடிவில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என இருந்தது. அந்த ஓவரில் ஷிவம் துபே ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் நூர் அகமது ஆட்டமிழந்தார்.
20ஆவது ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தில் தோனி ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தார். புதிய பேட்ஸ்மென் அன்ஷுல் காம்போஜ் அடுத்த மூன்று பந்துகளையும் சந்தித்து வெற்றிக்குத் தேவையான ஒரு ரன்னை எடுக்க வேண்டும். அச்சமயத்தில் காம்போஜ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர் நூர் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றிக்குப் பின்னரும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது,
கொல்கொத்தா அணியின் பிளேஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளது. பிளேஆஃபுக்குச் செல்ல கொல்கொத்தா அணி அடுத்த இரண்டு மேட்சுகளில் வெற்றி பெற்று, பிற அணிகளின் வெற்றி, தோல்விக்காகக் காத்திருக்க வேண்டும்.
News First Appeared in