“ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா போராட்டம் வீண்”… வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் CSK அதிர்ச்சி தோல்வி… வெற்றிவாகை சூடிய ஆர்சிபி..!!
SeithiSolai Tamil May 11, 2025 04:48 PM

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிளே ஆப் சுற்றில் இருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ஸ்டேடியத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்கள் வரை எடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆயுஷ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 94 ரன்கள் எடுத்த நிலையில் டிவேன் பிரேவிஸ் வீசிய முதல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ஜடேஜா 77 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் கடைசியில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது. மேலும் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஆயுஷ் மாத்ரே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.