லக்னோவில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மோஸ் ஏவுகணையின் உற்பத்தி அலகு அமைக்கப்பட்டது.
ஆண்டுக்கு 80 முதல் 100 பிரமோஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவத் துறையின் பலத்தை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்துக் காட்டியதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான கோட்பாட்டை ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உரக்கச் சொல்லியதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தாக்குதலில் தங்கள் குடும்பங்களை இழந்தவர்களுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நீதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.