இத்தாலியின் கொமோ அருகேயுள்ள வெனியானோ கிராமத்தில் கிராம விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, 25 வயதான டெலிவரி பணியாளர் ஹான்ஸ் ஜூனியர் க்ரூப்பே சிறிது தண்ணீர் சிந்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 47 வயது தொழிற்சாலை தொழிலாளரான காப்ரியேல் லுராஸ்சி என்பவரால் கத்தியால் பலமுறை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் அவர்களின் 11 வயது மகனின் முன்னிலையில் நடந்தது. கத்தியால் குத்தப்பட்ட ஹான்ஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு உயிரிழந்தார். தாக்குதலுக்குப் பிறகு தனது வீட்டிற்கு சென்ற லுராஸ்சி, தனது போலீஸ் நண்பருக்கு அழைத்து, “அவர் எழுந்து வந்ததைப் பார்த்தேன், உயிரிழந்தார் என்று நினைக்கவில்லை” என கூறி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பின்னர், அதே உடைகளுடன் இருந்த அவரை போலீசார் கைது செய்து, அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். ஹான்ஸின் நண்பர்கள், இது ஒரு சாதாரண சந்திப்பு என்றும், அவர் குடிநீரரை சிந்தியதால் ஏற்பட்ட ஒரு சின்ன தகராறு உயிரிழப்பில் முடிந்தது என்றும் கூறியுள்ளனர்.
ஹான்ஸ், தனது டச்சு தந்தையும், ஸ்பெயின் தாயாருடனும் வெனியானோவில் வாழ்ந்து வந்தார். UPS குரியராக பணியாற்றிய ஹான்ஸின் மரணத்தால் அந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. “ஒரு துளி தண்ணீர் சிந்தியது மட்டும்தான்; இதற்காக ஒரு உயிர் போக வேண்டுமா?” என அவரது நண்பர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொமோ நகரில் குற்றச் செயல்கள் குறைவாகவே உள்ளன என்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்கள் அதிகரித்துள்ளன என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.