2024 ஆம் ஆண்டு, CBSE தேர்வு முடிவுகளை மே 13 ஆம் தேதி வெளியானது. 2023 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முறையும் மே 15 ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை CBSE-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் DigiLocker மற்றும் Umang செயலி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.
CBSE தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ள தேவைப்படும் விவரங்கள் என்ன?
CBSE தேர்வு முடிவுகளை செக் செய்ய, மாணவர்கள் ரோல் நம்பர், பிறந்த தேதி மற்றும் பள்ளிக் குறியீட்டை வழங்க வேண்டும்.
CBSE Result 2025, SMS: SMS மூலம் செக் செய்வது எப்படி?
இந்த முறை, சிபிஎஸ்இ முடிவைச் சரிபார்க்க எஸ்எம்எஸ் செய்யும் விருப்பத்தையும் வழங்கியுள்ளது. மாணவர்கள் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் தேர்வு முடிவுகளைப் பெறலாம். இதற்கு, செய்திப் பெட்டிக்குச் சென்று - cbse10 அல்லது cbse12 என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். தேர்வு முடிவுத் தகவல் விரைவில் SMS மூலம் கிடைக்கும்.
CBSE தேர்வு முடிவுகள் 2025: டிஜிலாக்கரில் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
DigiLocker -இல் தேர்வு முடிவைப் பார்க்க, மாணவர்கள் digilocker.gov.in-க்குச் சென்று தங்கள் வகுப்பு, ரோல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பள்ளியால் பகிரப்பட்ட 6 இலக்க PIN குறியீட்டை உள்ளிட வேண்டும். OTP சரிபார்ப்பிற்குப் பிறகு, முடிவு ‘Documents’ பிரிவில் கிடைக்கும்.
CBSE 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்கள் என்ன?
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்களைப் பொறுத்தவரை, 10 ஆம் வகுப்பில் மாணவர்கள் தியரி மற்றும் இன்டர்னல் பாடங்களில் மொத்தம் 33% மதிப்பெண்களைப் பெற வேண்டும். 12 ஆம் வகுப்பில் தியரி மற்றும் பிராக்டிகல் பாடங்களில் தனித்தனியாக 33% மதிப்பெண்கள் பெற வேண்டும். தேவைப்பட்டால் கருணை மதிப்பெண்களும் வழங்கப்படலாம்.