நெகிழ்ச்சி..! குழந்தைக்கு “சிந்தூர்” என பெயர் சூட்டல் !
Newstm Tamil May 10, 2025 01:48 AM

பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி சூளுரைத்திருந்தார். அதற்காக இந்திய அரசு மிக துள்ளியமான திட்டத்தை வகுத்தது. அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, இந்திய ராணுவம், விமானப்படை வீரர்கள் அதிரடியாக பாகிஸ்தானுக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தன. மேலும், 100 பயங்கரவாதிகளை கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் உலக அளவில் பெரிதாக பேசப்பட்டது.

சிந்தூர் பெயர் காரணம்அப்போது, சிந்தூர் என்ற பெயருக்கான விளக்கத்தை பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி, பஹல்காமில் கொல்லப்பட்டவர்களின் மனைவி நெற்றியில் இருந்த பொட்டுக்கு தான் இந்த பெயர் என தகவல் வந்தது. அதாவது பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு என்பது அர்த்தம்.

இந்த நிலையில், இந்த ஆபரேஷன் சிந்தூர் என்ற பெரிய திட்டத்துக்கு மேலும், சிறப்பு சேர்க்கும் வகையில் பீகாரில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டியுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட நாளில் பீகாரில் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது.

இதை நினைவு படுத்தும் வகையிலும், பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த வகையிலும் இந்த பெயரை அந்த தம்பதி தனது குழந்தைக்கு சூட்டியுள்ளனர். இதேபோல, சுமார் 12 குழந்தைகளுக்கு சிந்தூர் எனவும் அதில் ஒரு பெண் குழந்தைக்கு சிந்தூரி எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.