இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவுகிறது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்ததால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் பல இடங்களில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தான் உலக நாடுகளிடமும் நட்பு நாடுகளிடமும் கடன் உதவி கேட்ட நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 8542 கோடி கடன் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதில் சர்வதேச நாணய நிதியம் விதிகளில் எதிர்த்து வாக்களிக்கும் செயல்முறை இல்லாததால் இந்தியா புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்திய கூறுகளும் இருப்பதாக இந்தியா எச்சரித்துள்ளது.
முறையான பொருளாதார சீர்திருத்தங்களை பாகிஸ்தான் செயல்படுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியா பாகிஸ்தானில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களின் செயல் திறன் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தற்போது பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கப்படுவதால் பயங்கரவாதத்திற்கு உதவும் என்று இந்தியா சர்வதேச நாணய நிதியத்தை எச்சரித்துள்ளது.
The post appeared first on .