“ஆப்ரேஷன் சிந்தூர்”… பெயர் உரிமம் பெற போட்டி போடும் பாலிவுட் திரையுலகம்…!!
SeithiSolai Tamil May 10, 2025 05:48 PM

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நடவடிக்கைக்கு “சிந்தூர்” என பெயர் வைக்க காரணம், இந்திய கலாச்சாரத்தில் திருமணம் ஆன பெண்கள் குங்குமம் வைப்பது கலாச்சாரமாகும்.

அந்த பஹல்காம் தாக்குதலில் பல பெண்களின் குங்குமத்தை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் அதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பெயர் இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமானதை அடுத்து பல பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை பயன்படுத்த பெயர் உரிமம் வாங்குவதற்கு போட்டி போடுவதாக கூறப்படுகிறது. இதுவரை அந்தப் பெயரை வாங்குவதற்காக கடந்த இரு நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.