ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். அந்த ஆதார் அட்டையானது அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் முதன்மையாக தேவைப்படுகிறது.
தற்போதைய காலத்தில் ஆதார் எண்ணானது ரேஷன் கடை முதல் வங்கிகள் வரை அனைத்து இடங்களிலும் தேவைப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI சேவையை பயன்படுத்தலாம்.
அந்த ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்கள் எத்தனை ஆதார் கார்டுடன் இணைக்க முடியும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதாவது ஒரு குடும்ப உறுப்பினர்கள் ஒரே மொபைல் நம்பருடன் எத்தனை ஆதார் கார்டு வேண்டுமானாலும் இணைக்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இது குறித்து கூறியதாவது, ஒரே மொபைல் எண்ணுடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என தெளிவுபடுத்தி உள்ளது.
இதன் மூலம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஆதார இணைப்புக்கு ஒரு முக்கிய நபரின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.