கேரளத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது... வானிலை ஆய்வு மையம் தகவல்!
Dinamaalai May 10, 2025 11:48 PM

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27ம் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எதிர்பார்ப்புப்படி, வரும் மே 27ம் தேதி பருவமழை தொடங்கினால், கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்பு, இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் முதன்மையான பருவமழை வழக்கமாக ஜுன் 1ம் தேதி கேரளாவை வந்தடையும். 

இந்தியாவின் மழைப் பொழிவில் 70 சதவீதம் பருவமழையால் மட்டுமே கிடைக்கிறது. பருவமழை என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கான உயிர்நாடியாகும். இந்தியாவின் விவசாய பரப்பில் 51 சதவீதம், பருவமழையை நம்பியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.