இந்தியா-பாகிஸ்தான் மோதல் தீவிரமடைந்ததால், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால் ஏற்கனவே வடஇந்தியாவில் வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து WFH பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி-NCR மற்றும் நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள சில நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே WFH வேலை வழங்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் உள்ள ஒரு சில ஐடி நிறுவனங்கள், மும்பையில் உள்ள ஐடி நிறுவனங்கள், குருகிராமில் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு WFH கொடுத்துள்ளது.
டெலாய்ட், கேபிஎம்ஜி, ஈஒய், எச்சிஎல்டெக், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. மற்ற ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் WFH ஆப்ஷனை இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அத்தியாவசியமற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களை ஒத்திவைக்குமாறும் ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. எல்லை மாநிலங்களில் பணியில் இருக்கும் நபர்கள் வேறு இடங்களில் இருந்து வேலை பார்க்க விரும்பினால் அதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமும் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமுமான HCLTech தனது சண்டிகர், குருகிராம் மற்றும் நொய்டாவில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் WFH அறிவித்து உள்ளது.
Read more at: