இந்தியாவுடன் பதட்டமான சூழ்நிலை நிலவிவரும் வேளையில், பாகிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் மீது பெண் எம்.பி. ஒருவர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட வீடியோவே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரிட்டனின் Sky News சேனலுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், “பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளுக்காக பயங்கரவாத இயக்கங்களுக்கு பயிற்சி, நிதியுதவி, ஆதரவு வழங்கி வந்தது. இது தவறு தான். ஆனால் அதற்காக நாங்கள் நஷ்டம் அடைந்தோம்” என தெரிவித்துள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாகவே இந்த நடவடிக்கைகள் நடந்ததாக அவர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த பேட்டிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பெண் எம்.பி., “பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் இந்த அளவுக்கு பொறுப்பற்ற முறையில் பேசி நாட்டின் மதிப்பை குறைக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். சர்வதேச ஊடகங்களில் உங்களை நீங்களே கேலி செய்ய வேண்டாம். உங்கள் அரசாங்கத்தையும் நாட்டையும் அவமதிக்க வேண்டாம்” என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு வீடியோ வடிவத்தில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
The post appeared first on .