உயிரிழந்த காஷ்மீர் மக்களுக்கு ரூ,10 லட்சம் நிதியுதவி - உமர் அப்துல்லா..!
Newstm Tamil May 11, 2025 01:48 PM

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் உறவினர்களை கட்டி அணைத்த உமர் அப்துல்லா, அரசு எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். 

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் நிதி உதவி அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிதலமைந்த பகுதிகளை நேரில் சென்று உமர் அப்துல்லா பார்வையிட்டார்.


எல்லையில் பதற்றம் தணிந்த பிறகு பாதுகாப்பு முகாமில் உள்ளவர்கள் அவர்களுடைய சொந்த இடத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்திய நிலையில், அதன் பாகங்கள் பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறது. இந்த சிதறி கிடக்கும் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என உள்ளூர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற பாகங்களை எங்கேயாவது கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.