இலங்கையின் நுவரொலியா அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இலங்கை கொழுப்பில், கதிர்காமத்தில் இருந்து குருநாகல் செல்லும் வழியில் கம்பளை அருகே சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.
இலங்கையில் கொத்மலைக்கு அருகிலுள்ள கெரண்டியெல்ல பகுதியில் இன்று அதிகாலை 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
70 புத்த யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோத்மலே பகுதிக்கு அருகில் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தது. பேருந்தின் கொள்ளளவை விட 20 பேர் அதிகமாக பயணித்ததாக உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இலங்கையில் சமீபத்திய மாதங்களில் நடந்த மிக மோசமான சாலை விபத்துகளில் இதுவும் ஒன்று. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.