எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிப்பு... 20 நிமிடம் முன்னதாக வந்து சேரும்!
Dinamaalai May 13, 2025 10:48 PM

மைசூர் - தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ரயில் 20 நிமிடம் முன்கூட்டியே தூத்துக்குடியை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூர், மேட்டுப்பாளையம், பாலக்காடு, நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மைசூர் - தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் விரைவாக தூத்துக்குடியை வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில் (16236) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மைசூரில் இருந்து மாலை 6.20-க்கும் புறப்படும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திண்டுக்கல்லுக்கு 6.17-க்கு பதிலாக 6.03-க்கு வந்து சேருகிறது. தொடர்ந்து தூத்துக்குடிக்கு 10.35-க்கு பதிலாக 10.15 மணிக்கு வந்து சேருகிறது. இதனால் 20 நிமிடங்கள் முன்கூட்டியே தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த நேர மாற்றம் 11.7.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.