மே 11ம் தேதி அன்னையர் தினம் அன்று, சம்பந்தப்பட்ட வீடுகளில் ஒருவர், தமது தோட்டத்தில் கழிவுடன் கூடிய காகிதத் துணியை கண்டுபிடித்து வேதனையடைந்தார்.இது அமேசான் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் இதை நினைத்து நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம் என வருத்தம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட பெண் ஊழியரையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமும் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.