நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபாவில் தோன்றியதன் மூலம் தனது கேரியரை தொடங்கினார் சந்தானம். அதற்கு பின்னால் நடிகர் சிம்பு மன்மதன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்தார்.அதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சந்தானம்.
தொடர்ந்து 2000 த்தின் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகர்களுக்கு நண்பராக நகைச்சுவை நடிகராக சச்சின், பொல்லாதவன், அறை எண் 305 இல் கடவுள் சிவா மனசுல சக்தி பாஸ் என்ற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் சந்தானம். இவர் டைமிங்கில் பேசும் பஞ்சு டயலாக்குகள் மிகப் பிரபலமாக ஆனது.
2010 காலகட்டத்திற்கு பிறகு நடிகராக நடிக்க வேண்டும் என்ற விருப்பப்பட்ட சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் மூன்று பேர்களில் ஒருவராக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்ததை விட நாயகனாக அவருக்கு கிடைத்த வரவேற்பு குறைவு தான். ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார் சந்தானம். ஆனால் இவர் நடித்த தில்லுக்கு துட்டு திரைப்படம் மிகப் பிரபலமானது. இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் டிடி ரிட்டன்ஸ் என்று அடுத்து வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்தானம் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சந்தானம் கூறியது என்னவென்றால், பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சூர்யா ஜோதிகா நடித்த உயிரின் உயிரே பாடல் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதால் அவர்கள் ஏதும் நினைத்து கொள்வார்களா என்று கேட்டனர். அதற்கு சந்தானம் இது ஒரு காமெடியான திரைப்படம் இதில் அந்த பாடலை பயன்படுத்தியதற்கு சூர்யா ஜோதிகா கோபப்பட மாட்டார்கள். மேலும் அந்த காட்சியில் கௌதம் வாசுதேவ் மேனன் சார் தான் நடித்துள்ளார். அதனால் இது ரசிகம்படியாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் சந்தானம்.