போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்திய எல்லையோரங்களில் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதல் அனைத்தையும் இந்தியா தனது வான்வழி பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலம் முறியடித்தது. இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
இதில் பாகிஸ்தானின் ட்ரோன்களை அழித்த போது அந்த ட்ரோன்களின் பாகங்கள் சிதறி இராணுவ வீரர் மீது விழுந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த அந்த ராணுவ வீரர் தற்போது வீர மரணம் அடைந்திருக்கிறார். இதேபோன்று காஷ்மீர் மாநிலம் புன்ச் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சுடுதல் நடத்திருக்கிறது.
இதில் 25வது பஞ்சாப் ரெஜிமேண்ட்டை சேர்ந்த மேஜர் பவன் குமார் நாட்டிற்காக உயர் தியாகம் செய்திருக்கிறார். சனிக்கிழமை காலை ஏழு முப்பது மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மேஜர் பவன் குமார் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் அவருடைய சொந்த மாவட்டமான கங்ராவில் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்த மேஜர் பவன் குமார் குடும்பத்தாருக்கு இமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுகுவிந்தர் சிங் சுப்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருப்பது எல்லையோர பகுதியில் இருக்கும் மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை அளித்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் செய்த அடாவடி செயலால் பலரும் தங்களது வீட்டை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.